விறகான வீணைகள்

Subscribe to Oneindia Tamil

உள்ளத்தை ரணமாக்கி
உடலை பணமாக்கும் சோகம்,
உணர்வு பசி தீர்த்தாலே
உணவு பசி தீரும் அவலம்.

வாடகைக்கு போகும்
விலைபோகா வீணைகள்
இரவிலோ அட்சய வீணைகள்
பகலிலோ எச்சை வீணைகள்

காலத்தின் தடுமாற்றத்தால்
கட்டில் மேடையில் அரங்கேற்றம்,
வீணைகள் என்ற போதிலும்
அரங்கேற்றத்தில் மெளனங்களே பறிமாற்றம்.

ஒவ்வொரு மீட்டலிலும் ஒவ்வொன்றாய்
உணர்ச்சி தந்திகள் அறுபட்டதால்
தங்கள் சொந்த சிதைக்கே
விறகாகும் வீணைகள்.

பாரதி இருந்திருந்தால்
பல்லவியை மாற்றியிருப்பான்,
நல்லதோர் வீணைசெய்து அதை
நலங்கெட புழுதியில் - அன்று
படுக்கையில் எறிந்தோம் என்று.

மோகத்தினால் வந்த வேகத்தினால்
இவ்வீணைகளின் தேகத்தை அணைக்க ஆட்களுண்டு,
சோகத்தை அணைக்க ஒருவராவது...

- ஜெகன்([email protected])

இவரது முந்தைய படைப்புகள்:

1.பணம்


படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+