Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போர் முரசு!

Subscribe to Oneindia Tamil

தவளைக் குரலில் முழங்கினால் இங்குள்ள
தாழ்வு மறைந்திடுமோ? - நாலு
கவிதை எழுதிக் கிழித்துவிட்டால் எங்கள்
கவலை குறைந்திடுமோ?- வீட்டுச்
சுவருக்குள் ஆயிரம் திட்டங்கள் தீட்டிச்
சுதந்திரம் வாங்கிடவோ? - தலை
குவியக் கிடந்த செருக்களம் ஆடிக்
குதிக்கப் புறப்படடா !

உச்சியில் நின்று விழுந்துவிட்டோம் அட
உணர்ச்சி இழந்துவிட்டோம்! - உயிர்
அச்சத்தினால் இங்கு சாய்ந்துவிட்டோம்! -வீட்டில்
அடங்கி இருந்துவிட்டோம்! - தெருப்
பிச்சை எடுத்து வளர்ந்துவிட்டோம்- புகழ்
பேண மறந்துவிட்டோம்!- இந்த
எச்சில் நிலை இனி இல்லை எனக்கொடி
ஏந்திப் புறப்படடா!

நாற்றிசை மண்ணும் கடலும் மலைகளும்
நடுங்க வலம் வருவோம்! - பெரும்
ஆற்றல் மிகுந்தவள் அன்னை அவள்மிசை
ஆணை எடுத்திடுவோம்! - இங்கு
வேற்று நிலத்தவர் ஆட்சியெனில் அந்த
விலங்கை உடைத்தெறிவோம்! - அட
சோற்றுக்கு வாழ்ந்து சுருண்டது போதும்
சுழன்று புறப்படடா!

உலகம் அனைத்தையும் வென்ற குலத்தினை
ஊழ்வினை வெல்லுவதோ? - எங்கள்
மலைகள் எனுமிரு தோள்களையும் விதி
மங்கை மறந்தனளோ? - அவள்
கலகம் நடத்தித் தமிழர் குலத்தைக்
கவிழ்க்க முடியுமோடா? - அன்னை
முலையில் பருகிய மூச்சுடனே பறை
முழங்கிப் புறப்படடா!

- காசி ஆனந்தன்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+