நீரின்றி அழியாது உலகு
அரக்கனென்றும், பூதமென்றும்
கொம்பு முளைத்த
உருவங்களை சில கதைகளில்,
பார்த்திருக்கிறோம்!!
இனி வரும் கதைகளில்
உன் படத்தை மட்டும்தான்
அச்சடிக்க வேண்டும்!
என் அருமைக் கடலே!!
காற்று வாங்க வந்தவன்
காதலிக்க வந்தவன்
மீன் பிடிக்க வந்தவன்
மீன் பிடிக்கச் சென்றவனை,
எதிர்பார்த்திருந்தவன்,
என அனைவரையும், சாதி மத
பேதம் பாராமல், மொத்தமாய்
விழுங்கிய சமத்துவ
கல்லறை நீ !!
இனி கவிஞனெவனும்
உன்னை வர்ணிக்க மாட்டொம்,
எமனை வர்ணிக்கும் பழக்கம்,
கவிஞனுக்கு இல்லை!!
இனி, ஞாயிறு மாலைகளில்
எங்கள் குழந்தைகளை
விளையாட அழைத்து வர மாட்டொம்,
சுடுகாட்டுக்கு யாரும்
விளையாட வருவதில்லை!!
இனி சிப்பியெடுக்கவும்
சங்கு பொருக்கவும்,
உன்னிடம் வர மாட்டொம்,
உனக்குள் புதைந்தவர்களை
முதலில் பொறுக்கிக் கொள்கிறோம்!!
மீண்டும் ஒருமுறை
கொந்தளிக்காதே!!
நிவாரணப் பணி
செய்ய வேறு யாருமில்லை!!
கடல் நீரைக் குடிநீராக்கப்
போகிறதாம் அரசு!!
கண்டிப்பாக விடமாட்டொம்,
உப்புக் கரித்தாலும் பரவாயில்லை
எங்கள் சொந்தங்களின்
ரத்தம் கரித்த நீரை
குடிக்க நாங்கள்
மிருகமில்லை!!
நீரின்றி அமையாது உலகு!!
முன்னோர்கள் கூறினார்கள்
இனி நாங்கள் கூறுவோம்,
நீரின்றி அழியாது உலகு!!
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications