கைம் பெண்- க்ருஷாங்கினி
தெரிந்துதான் போயிற்று நேரனுபவம்
எளிதல்ல என்றும் என்று
கைம் பெண் என்றனர்
கணவன் இறந்ததும்
பெண்ணின் புலம்பலோடு
ஆணின் நெருப்போடு
எரிந்தாள் உயிரோடு அவள்
தன் பதியின் உடலோடு.
நிழல் போல சார்ந்தார் உணர்வைத்
தனதாக்கி சிரித்தாள், அழுதாள் எதிர்மறையாக
வளை நொறுங்க மனமுடலும் நொறுங்க
ஆணைப் போல உள்ளடக்கி, அடிமை வாழ்வைத்
தனதாக்கி வாழ்ந்தாள் என
சொல்லல் தகுமோ?
தீர்மானமாயிற்று மனம் முழுக்க,
சொட்டும் வெளிவராது கண்ணீர் என
தெரிந்துதான் போயிற்று நேரடி அனுபவம்
எதிர் கொள்ளல் எளிதல்ல என்று
கிளம்பினேன் பொட்டுடன் வாகனம் ஓட்டி
உறைந்த சோகத்தைப் போர்த்திய புன்னகையுடன்
உடை விறைக்க, உடல் சரிய, நடை நிமிர
விசிறி கீற்றுச் சரிகை ஒளிவிட
அலுவலகத்தில் அனுதாபம் அலை வழிய
சில நாட்கள் கிளறிய சோகம்
வேடிக்கை அல்லது வம்பு
கிண்டல் உடன் கூடிய சீண்டல்
சேகரித்து சிறிய
பையிலிட்டு வெகுதூரம்
விசிறி விட்டு
தெளிந்து நடந்தேன், நடப்பேன்
முன்னேறி, முன்னேறி - என்
வழி நோக்கி காற்றென, ஒளியென
தெரிந்துதான் போயிற்று நேரடி அனுபவம்
எளிதல்ல என்றும் என்று
- க்ருஷாங்கினி([email protected])
இவரது முந்தைய படைப்பு:
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications