கண்ணாமூச்சி ரே, ரே!- க்ருஷாங்கினி
Subscribe to Oneindia Tamil
கண்ணாமூச்சி ரே ரே ரோ!
காட்டுமூச்சி ரே ரே ரோ!
வழியின் இருமருங்கும்
இட்டு நிறுத்திய
கொம்பில் செவ்வகத்
தட்டியில் சிரித்தபடி
கை கூப்பி வண்ணப் புகைப்படத்தில்
ஒரு அம்மா!
மரத் தகட்டில் வெட்டி ஒட்டி வடிவமைத்து
உடையும் சிரிப்பில் ஒரு சேர
வெண்மையில் கை உயர்த்த
வருடமொருமுறை ஒரு அம்மா!
உறைவிடம் வருமுன்னே
தெளித்துச் சிதற
வெகுதூரம் வெடித்துப் பரவி
வெவ்வேறு உருவத்தில்
செவ்வாடை தரித்த என் அம்மா!
காக்கைக் கூட்டில் முட்டையிடும்
குயிலுக்கு ஏன் அம்மா?
அவனுக்கு இரு அம்மா
இவருக்கு ஒரு அம்மா
அனாதைக்கு யாரம்மா?
எனக்கொரு அம்மா
உனக்கொரு அம்மா
கொண்டோடிவா ரே ரே ரோ!












Click it and Unblock the Notifications