விடியல் உன் கையில்- லலிதா சுந்தர்
இரவின் மடியில் சாய்ந்து
விடியலுக்காய் காத்திருப்பதை விட
இரவின் கைப்பிடித்து நடைப்பயணம் செய்
விடியல் உனக்கு கம்பளம் விரிக்கும்
உழைப்பென்னும் உளி கொண்டு செதுக்கு
உயிர் சிற்பமாய் தோன்றுவாள் வெற்றி தேவதை
வாய்ப்புகள் கதவை தட்டும் என
காலச் சக்கரத்தை வேடிக்கை பார்ப்பதா?
காலச் சக்கரத்துடன் நீயும் சுழலு
வாய்ப்புகள் உன் வாசலில் வரிசையில் நிற்கும்
கால்களை கற்கள் பதம் பார்த்தாலும்
நதி தன் ஓட்டம் நிறுத்துவதில்லை
கடலில் கலக்கும் வரை
மனிதா.. நீயும் உன் இலட்சியப் பாதையில்
குதிரையாய் - ஓடிப்பார்
உன் இலக்கு உன் கையில்
நிலக்கரி பிரித்த வைரமாய்
-லலிதா சுந்தர் ([email protected])
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications