கையில் துப்பாக்கியுடன் கலைமகள்
கலைமகள்
வீணையுடன் அன்று!
கலைமகள்
துப்பாக்கியுடன்
இன்று!
இசையின்
இன்பமறிந்த
உ(ந)மக்கு
உலா வரப்போகிறாள்
கையில் துப்பாக்கியுடன்
கலைமகள்!!!
துன்பத்தை
துவசமாக்க...
நியாயத்தை
நிலைக்கச் செய்ய...
அழிவுகளை
அழிக்க...
தோல்விகளை
தோற்கச் செய்ய...
இப்படியாய்...
முன்னேறும் யுகத்தின்
முயற்சியின் தடைகளைத்
தகர்த்தெறிய இதோ
கலைமகள் நம்முன்
கையில் துப்பாக்கியுடன்!!!
நிலா சொன்னது
நிகழ்காலத் தத்துவம்!!!
உறக்கம் எனை...
உபசரிக்காத போது
சட்டென்று...
சாளரம் வழியே
நிலா
நீதானா?
சிறைக்குள்
சிரித்தது நிலா...
சிந்தித்ததும்
சிந்தனை
சொல்லியது
சிறை விளக்கம்
சிரிப்பின் அர்த்தம்!!!
நீ (நிலா)
பார்க்கையில்
நான்
சிறைக்குள்!
நான்
பார்க்கையில்
நீ
சிறைக்குள்!
தத்துவம் புரிந்தது
தவித்தேன்...
பூவென்றார் நிலவென்றார்!
புதுக்கவிதை சொன்னார்!!
புகழ்ச்சியென்று
பெருமை கொள்ளாதே!
உதாரணம் காட்டியது
உதாசீனம் செய்திட...
அத்தனையும்
அரவணைத்தவாறே
சிறைப்படுத்திட...
சிக்கனமான
ஆண்களின் அஸ்திரங்கள்!
அஸ்திரத்தை
எதிர்த்திட
எதிரில் வந்தாள்
கவியெழுத கருத்தந்தாள்...
ஆம்...
கலைமகள் கையில்
வீணையல்ல...
துளைத்தெறியும்
துப்பாக்கி...
இனி
நியாயம்...
அநியாயம்
ஆகுமிடத்தில்
அவதரிப்பாள்
கலைமகள்...
கையில் துப்பாக்கியுடன்!!
வறுமையின் விந்தில்
பிறந்தவர்கள்
பிரசவமானது
பிழையென்பீரோ?
நினைவுகளில்
நிலைக்காது...
எச்சரிக்கை
எதார்த்தமானது...
மாறுங்கள்...
மாற்றிக்கொள்ளுங்கள்...
இசையின்
பாடம்
புரியாதபோது
துப்பாக்கியிலும்
தப்பாமல்
போதிப்பாள்
கலைமகள்...
மனிதநேயம்
மகத்தானது!
துப்பாக்கியால்
திருத்தப்படுவதைவிட...
மலரின்
மலர்ச்சிபோல் ...
இயற்கையே
இன்பமானது!
இயல்பானது!
பொறுத்தார்
பூமியாள்வார்..
பொறுத்ததினால்
பொசுக்கப்பட்டோம்...
என்பவைமாறி...
பொறுத்தார்
பூமியாள்வார்..
பொறுமை கடந்தால்
பொசுக்கிவிடுவோம்
என்றாகியது...
கையில்
துப்பாக்கியுடன்
கலைமகள்!!!
ஆம்...
நிகழ்காலத்தை
நிஐமாக்க...
எதிர்காலத்தை
எளிதாக்க...
புதிய யுகத்தில்
சிறிய எச்சரிக்கை...
கையில்
துப்பாக்கியுடன்
நம்முன்
நவயுகக் கலைமகள்!!!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications