ஒரு பழைய காதலும் ஒரு கவிதையும்
Subscribe to Oneindia Tamil
மாடிப்படியின் அடியில்
முடங்கிக் கிடக்கிறது
என் பழைய சைக்கிள்.
பச்சைப் பெயிண்ட் உதிர்ந்து
அங்கங்கே பல்லிளிக்கின்றன
உலோக எலும்புகள்.
மேல்புற மூடி இல்லாமல்
சைக்கிள் பெல்
தொழில்நுட்பம் பயிற்றுவிக்கிறது.
எப்போதோ ஒரு ஆயுதபூஜையன்று
வைத்த
குங்குமத்தின் சிவப்பு,
கொஞ்சம் கொஞ்சமாய்
அழிந்து கொண்டிருக்கிறது
ஹேண்டில் பார் நடுவில்.
சீட் கவரில்
தோல் கடலால் சூழப்பட்ட
பலகைத்தீவு போல்
ஒரு பெரிய ஓட்டை.
பல பெண்டுகளும்
பல நிமிர்த்தல்களும் கண்ட
வீல்.
காற்றிழந்து,
பாம்பின் உரிக்கப்பட்ட சட்டை போல்
உயிரிழந்து,
ட்யூப்.
இன்னும் துருப்பிடிக்காமல் இருக்கிறது,
அவளை முன் பாரில்
உட்கார வைத்து
சுற்றித் திரிந்த நாட்களின்
மல்லிகை வாசம் மட்டும்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications