பொது மன்னிப்பு
(ஆயுள் தண்டனை பெற்ற சிறையாளி)
(பத்து ஆண்டுகளைக் கழித்துவிட்ட வாழ்நாள் தண்டனைச் சிறையாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது மரபு. ஆனால் கடந்த மூன்றுஆண்டுகளாகத் தமிழக அரசு அம்மரபைப் பின்பற்றவில்லை)
ஆறிரண்டு ஆண்டுகளை
அணுஅணுவாய்க் கழித்த
கைதிகள் மட்டும்தான்
நிதானமாய் அனுபவிக்கிறார்கள்
தண்டனையை!
உறங்குகின்ற கைதிகள்
உறவினருடன் இருப்பதாய்க்
கனவுகண்டு விழிக்கையில்
கம்பிகளின்... இரும்புக் கம்பிகளின்
நீண்ட நிழல்கள் நினைவுபடுத்துகின்றன
இருப்பது சிறை என்பதை!
தண்டிக்கப்பட்ட கைதிகளுக்கு
எஞ்சியிருக்கும்
கொஞ்சநாள் வாழ்வு
நம்பியிருந்த
பொது மன்னிப்பில்
மிச்சமாய் இருந்தது!
தமிழக அரசின் பாரா முகத்தால்
கடைசி நம்பிக்கையும்
கரைந்து கொண்டிருக்கிறது.
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications