மனசாட்சி
Subscribe to Oneindia Tamil
இயலாதோரைக் கண்டபின்பும்
ஈரடி எடுத்து வைத்தால்
இழுத்து வந்து உதவ வைத்து
இடித்துரைக்கும்- -யார்க்கும்
தெரியாது என்றெண்ணி
தீயவற்றைச் செய்து விட்டால்
தினந்தோறும் நினைவூட்டிக்
கலங்க வைக்கும்!
உழைப்போர்க்குத் தான்கண்ட
அணுசக்தி, மக்களை
அழிப்போர்க்குப் பயன்படும்
அவலத்தால்.. நோபல் ஐ
பழிப்பார்கள் உலகத்தார்
என்றுணர்த்தி சாதித்தோர்
செழித்தோங்க செல்வத்தைக்
கொடுக்க வைக்கும்!
ஆடம்பர உடையணிந்த
மோகன்தாஸ் கரம்சந்தை
அரையாடை உடுத்தவைத்து
காந்தியாக்கும்-- மன்னன்
சித்தார்த்தன் உள்ளிருந்து
சிந்திக்க வைத்து, அவனை
புத்தனாக மாற்றி
உலகின் புனிதனாக்கும்!
மாவீரன் அசோகனை
மனம்வருந்தி மனிதனாக
மறையாமல் வரலாற்றில்
வாழவைக்கும்-- எங்கும்
ஒளியின்றி போனாலும்
உள்ளிருந்து ஒலியெழுப்பி
உடனிருந்து வழிநடத்தும்
உண்மையான நிழல்..!!!
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications