• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

வேண்டாம் புத்தாண்டே..!

By Staff
|

கடல் தாயே..! என வணங்கி

கரை மடியில் வாழ்ந்தோரை

அலை கரத்தால் தாலாட்டி

இரை கொடுத்து வளர்த்துப் - பின்

எதிர்பாரா சீற்றத்தோடு

பலிகொண்ட கொடுமை வேண்டாம்..!

கண்காணாக் கிருமி, உயிர்க்

காவுவாங்கும் நோய்கள் வேண்டாம்..!

இனப்பகையைத் தூண்டுகின்ற

இழிந்தவர்கள் இருக்க வேண்டாம்..!

வளம் சுரண்ட அப்பாவிகள்

உயிர்க் குடிக்கும் போர்கள் வேண்டாம்..!

வஞ்சகரே உலகாளும் வல்லரசா?

வேண்டாம்..! வேண்டாம்..!!

இரக்ககுணம் தொலைத்து விட்டு

இயந்திரம்போல் வாழ்வதுதான்

இன்று நாகரிகம் என்றால் -- அது

எங்களுக்கு வேண்டாம்..! வேண்டாம்..!!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X