நிலவின் புலம்பல்
பாடல், கவிதைகளில் என்னைப்
பாடாய்ப் படுத்தும் பாவலர்களே!
உங்களுக்குக்
கற்பனை வறண்டு போனால்
கன்னத்தில் எழுதுகோல் வைத்து
அண்ணாந்து பார்க்கின்றீர் ..!
சின்ன வெள்ளிப் பந்தாய் நான்
சிரித்தபடி மிதந்து செல்வது
பொறுப்பதில்லை உங்களுக்கு ..!
கன்னியரோ .. கழுதைகளோ..
என்னவாயிருந்தாலும்,
"வெண்ணிலவே! என்று நீங்கள்
விளித்து எழுதத் தொடங்கினாலே
வெலவெலத்துப் போகின்றேன்!
"ஆஹா .. ஆரம்பிச்சுட்டாங்க என
அலறியபடியே நான்
உலக உருண்டையின் நிழலில்
ஒளிந்து கொள்ள ஓடுகிறேன் ..!
அப்போதும் சளைக்காமல்
"பிறை நெற்றி, பிறைச் சிரிப்பு,
பிறைப் பருவம் என்றெல்லாம்
துரத்தித் துரத்திப் பிதற்றுகின்றீர்!
முற்றாக மறைந்தும் பார்த்தேன் ..
"அமாவாசைக் கூந்தல் என்று
அளந்து விடுகின்றீர் ..! அய்யகோ.. !!
நிறுத்திக் கொள்வீர் இதோடு என
நினைத்துக் கொண்டு
வெளியே வந்தால்
"வளர் பிறையே வா என்று
வாலாட்டத் தொடங்குகிறீர்..!
வான் கலத்தில் வந்து என் மேல்
கால் பதிப்பவர்களை விடவும்,
உங்கள் வார்த்தைகளைக் கண்டுதான்
அலறுகிறேன் .. பதறுகிறேன் ..!
அவ்வப்போது மேகத்துக்குள்
அவசரமாய் பதுங்குகிறேன்!
![]() மெதுவாக எட்டிப் பார்த்தால் கருங்கூந்தல் சூழ்ந்த அவள் "முகம் போல முகில் கிழிக்கும் முழு மதியே! என்று மீண்டும் முருங்கை மரம் ஏறுகின்றீர் ..! வேறெதையும் விடவும் - மொழி உங்களால் தான் மாதந்தோறும் எனக்காகப் பரிந்து பேசும் அவளுடைய அழகை நான் என்னை விட்டு வேறுபக்கம் - பனசை நடராஜன்,சிங்கப்பூர்([email protected])
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected] படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். |
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications