என் விருந்தாளி- பத்மப்ரியா
சீராய் பெருக்கிய முற்றத்தில் - மீண்டும்
சின்னஞ்சிறு சிறகுகள் - இது அவற்றின் வேலைதான்
முடிந்தவரை ஓரிரு சிறகுகள்- என்
முற்றத்து எல்லைக்குள் விழும்படி
கவனமாய் கோதி காற்றினில் அனுப்பும்
கூடத்து கண்ணாடியில் முகம் பார்த்து திரும்பும்.
சீவி சிங்காரிக்க என் வீடுதான் கிடைத்ததா?
கோதுமை நிறத்திலொன்று -- மனைவி
அடர் நிறத்திலின்னொன்று - கணவன்
தம்பதியர் தங்குவதற்கு
தடையேதுமில்லை என்வீட்டில்
ஆனாலும் வேறு நல்ல வீடாய் பார்த்து கூடுகட்டி
அடிக்கடி வந்து போகும் என் முற்றம் தாண்டி
என்றைக்கேனும் சில மணி அரிசிகளைச் சிதறுவேன்
சிறு அலகால் கொத்துவதை அருகிருந்து பார்ப்பேன்
ஆனால் இனி கட்டாயம் பிடி அரிசி
தினம் தினம் சிதற வேண்டும் - ஏன் எனில்
கட்டுரையில் கரைந்திருந்தது இன்டியன் எக்ஸ்ப்ரஸ்
சிட்டுக்குருவியினம் 80 விழுக்காடு அழிந்து விட்டது
மீதமுள்ளதோ வெறும் 20 விழுக்காடு மட்டுமே
கண்ணீர் உப்பிட்டு கைப்பிடி அரிசியை வைத்தேன் - ஏனோ
காணவில்லை இதுவரை என் சிட்டுக்களை.
- பத்மப்ரியா([email protected])
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications