மற்றொரு லெமூரியா. . .- பத்மப்ரியா
உலகிலேயே இரண்டாவது அழகியே
எந்த காலத்திலும் எல்லை மீறாமல்
எதையும் எதிர்பாராமல்
ஏந்திய செல்லமே. . . எங்கள் தாயே . .
நீயும் பொங்குவாயா. . .
பொங்கியே பிஞ்சுகளை
பொசுக்குவாயா?
நீரில் மூழ்கியல்ல -- இந்த
அதிர்ச்சியில் மூழ்கியே போனவர் பாதி
அன்னையே அழிப்பாளோ என
அமைதியாய் அடக்கமானோர் மீதி
நீ அடித்ததே தவறு.
அதோடு நில்லாமல்
அடிக்கிற கைதான்
அணைக்குமென - உயிர்களை
அணைத்ததும் தவறு.
கோழி மிதித்து குஞ்சுகள்
முடமாகித்தான் போனோம்
சல்லடையால் சலித்து
சலவை செய்தோம் உன்னை
நீயோ. . .
சகதியால் அடித்து
சவங்களைச் செய்தாய் இங்கு
உலகக் கோப்பை கிரிக்கெட் பார்த்து
உள்ளுர் கிரிக்கெட் விளையாடிய
உன் குழந்தைகளோடு
உனதிந்த
ஊழி விளையாட்டால்
உனக்குக் கிடைத்தது எந்தக் கோப்பை?
நாங்கள் கட்டியது
இரண்டு சமாதிகள் மட்டுமே,
இல்லையெனச் சொல்லவில்லை
அதற்காக நீ. . .
இரண்டாயிரம் பேருக்கு கட்டலாமா?
மங்கா நிலவொளியில் உன்
மடியமர்ந்து
மனம் குளிர்ந்தோரை
மண்ணுக்குள் மறைத்து
மற்றொரு லெமூரியாவா. . .?
ஏதோ பார்த்துச் செய். . .
நாங்கள் வெறும் மனிதர்கள் மட்டுமே.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications