மேற்கு சுனாமி
இருசக்கர வாகனத்தில்
இருவர் மூவராய்
நாராச கூச்சலோடு
நகரெங்கும் சுற்றி...
நள்ளிரவில்
நடுத் தெருவில்
நட்சத்திர ஓட்டலில்
நளினங்கள் அற்ற
நடனங்கள் ஆடி...
காரணமேயின்றி
காரிருளில்
கடற்கரையில் கூடி...
பொங்கும் பீர்
போதை ஏற்றி
போக்குவரத்தை உன்
போக்குக்கு மாற்றி...
அலட்டல் அலப்பரியாய்
ஆன்மீகச் செம்மலென
ஆண்டிறுதி நாளில்
அர்த்த ராத்திரியில்
ஆலயம் நோக்கி ஓடி...- என
இவை எதையுமே செய்யாமல்...
இளம் காலை விடியலில்
இதமாய் உச்சி முகர்ந்து
புது வருஷம்டா என்று
கன்னடிச் சென்ற
என் தந்தையோடு...
இயல்பாய் வாழ்ந்த
தமிழன் தான் அழிந்து போய்விட்டான்.
-பத்ம ப்ரியா([email protected])
இவரது முந்தைய படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications