நன்றி மறப்பது.. ..
வங்கியில்
வரிசையில் நான்
செல்லில் பேசி
நகத்தைக் கடித்து
கண்களால் மேய்ந்து
அலுப்பாய் சாய்ந்து
அரட்டை அடித்து
பணத்தை எண்ணி
இன்னும் பல பணிகளுடன்
என் சக வரிசையாளர்கள்
அபலை போல் அவள்..
அனேகமாய்
கீரைக்காரியாகத் தான்
இருப்பாள்
படிவம் நிரப்பும்
பணியை எனக்களித்து
பக்கத்து பெஞ்சில்
அமர்ந்து விட்டாள்
பேனா கடன் வாங்கி- அவளின்
படிவம் நிரப்பி தந்து
ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் காண
அவள் முகம் பார்க்கையில்
வரிசையில் மூன்று பேருக்கு
முன்னால் நின்றாள்
அசாத்திய வீரமுள்ள சிலர்
ஆட்சேபிக்கையில்
"" அப்போலேந்து அலையறேன்
இந்த பாரம் எழுத
எல்லோருக்கும் நோவுது என்றாள்
- பத்ம ப்ரியா([email protected])
இவரது முந்தைய படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications