தமிழரின் புத்தாண்டு?
ஆலய மணி ஓசையில்
ஆண்டவன் சன்னதியில்
ஆரம்பமாவது
ஆங்கிலப் புத்தாண்டு
மலர்களும் கனிகளும்
மகிழ்வொடு குவித்து
கூடி வணங்கி பிறப்பது
மலையாள விஷுக்கனி
அடுத்து வரும்
ஆண்டிற்கான
அடையாள விலங்கினை
அறிவித்துப் பிறப்பது
சீனப் புத்தாண்டு
அவரவர் அடையாளங்களை
அடுத்த தலைமுறைக்கு
அழகாய் அளித்து விட்டார்கள் அவர்கள்
நாம்..?
""சதா, அரட்டை, சிறப்பு விருந்தினர், மும்தாஜ்,
செல்லமே, ஜெமினி, அரசாட்சி, குஷி, த்ரீ ரோஸஸ்-இன்னும் பல
சிந்தனை சலவை செய்து
கேபிள் முக்தி தந்து
நாற்காலி மோன நிலை அருளும்
கலாசார வேர் புழு..
தொலைக்காட்சி பெட்டி ஒன்று தான்
நாம் அளித்த நமது அடையாளம்..
தமிழரே..மன்னிக்கவும்..
ஏனோ நினைவில் வந்து தொலைகிறது..
கல் தோன்றி மண் தோன்றா காலத்து
முன் தோன்றிய மூத்த குடி நம் குடி
- பத்மப்பிரியா([email protected])
இவரது முந்தைய படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications