பூந்தோட்டம்
நித்ய மல்லி
வலது பக்கத்திற்கு ஜாதி
பின்புற மதிலில் அடுக்கு மல்லி
கூடவே வெறும் மல்லி
வாயில் பிறை வளைவில்
பிடித்து படர கொடி சம்பங்கி
அடர்த்தியாய் சிரிக்க
அடுக்கு செம்பருத்தி
ஆசைக்கு சிவப்பு ரோஜா
ஆன்மீகத்திற்கு செவ்வரளி
முடிந்தால் மூலையில்
முல்லைக் கொடியொன்று
சிறு வெந்தயம், கொத்துமல்லி
சிந்தினாற் போல் சிறுகீரை
அவ்வளவும் இந்த
அரை கிரவுண்ட்
அடுக்ககத்தில் வளர்க்க
ஆசை என்றதும் என்னை
அடித்து துவைக்கும்
ஆவேசத்தில் என்
அகத்தினர்
ஆனாலும் அடமாய்
ஆறேழு தொட்டிகளில்
முளைக்கவே முளைக்காத
வெந்தயம், மல்லி
மொட்டே விடாத ரோஜா
மூன்றே இலை மனி பிளான்ட்
அறுவடையை மேற்பார்வையிடும்
நிலக் கிழாத்தி போல்
அதிகாலையில்
அரையடி தொட்டியை ஆராய்கையில்
ஐ.. .. சின்னூண்டு வேப்பங்கன்று
எங்கிருந்து வந்தாயடி நீ?
என்னிடம் ஏன் சேர்ந்தாயடி?
- பத்மப்பிரியா([email protected])
இவரது முந்தைய படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications