அவள்
உன்னைமட்டுமல்ல
ஊரையே பார்ப்பவன் அவள் என்றாலும்
உரைப்பதில்லை உனக்கு
அனைத்தும் இரவல்
அடுத்தவனிடம் வாங்கினாள் என்றாலும்
அவளது வெளிச்சப் பகட்டில் மயங்குகிறாய்
யாரோடு யாரை ஒப்பிடுகிறாய்?
நீ அவளையும் விரும்பலாம்
அதற்காக அவளோடு என்னையா?
ஓரவஞ்சனை ஒப்பிடலில் அவளை
ஓரப்பார்வை வேறு
அவளைப் பார்த்துக் கொண்டே
நான் வேண்டும் என்கின்றாய்
என்னைப் பார்த்துக் கொண்டே
அவளும் வேண்டும் என்கிறாய்
வெட்கமின்றி வெறிப்பவள் எதிரில்
வேண்டுமென்றே என்னை கொஞ்சுவாய்
வேறுபக்கம் போகாமல் அவளும்
வெளிச்சம் வேறு போடுவாள்
உன்னை பார்க்க இயலாத அவளின்
அந்த மூன்று நாட்கள் மட்டுமே
நீ எனக்கே எனக்கு
நான் இருந்தாலும் போனாலும்
நேரம் கடந்துதான் வந்தாலும்
நேர்த்தியாய் உன்னோடு மாலையில் அவளுண்டு
எனவே..
அந்த நிலாப் பெண்ணை
அப்புறப்படுத்து
அவள், நீ, நான் என
கோஷ்டி காதல்
அனுசரிக்க என்னால் இயலாது.
- பத்மப்பிரியா([email protected])
இவரது முந்தைய படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications