For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புன்னகையில்...

By Staff
Google Oneindia Tamil News

புன்னகையில் ஆரம்பித்தோம்
புதிராய்ப் பேசினோம்

மரியாதைகளை வேலிகளாக
இட்டுக்கொண்டோம்

எல்லைத் தாண்டாமலேயே
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம்

பரிசோதித்த பிறகே
வார்த்தைகளைப் பரிமாறிக்கொண்டோம்

அவ்வப்போது வெற்றிடங்களை
நிரப்பிக்கொண்டோம்!
கனவில் கூட நாகரிகமாக
பேசிக்கொண்டோம்
மெல்ல மெல்ல எட்டிப்பார்த்தது

காதல்ஏற்படுத்தியது...
இளம் நெஞ்சில் பல மின்னல்கள்
இனிமையான பல நினைவுகள்
புதியனவாய் பல அனுபவங்கள்
புதிது புதிதாய் பல உறவுகள்

காதலுக்கும் நமக்கும் நடந்த
யுத்தத்தில் காதல் வென்று விட்டது

காதல் நமக்கு புதிது
காதலுக்கு நாம் புதிது

பரந்து விரிந்த காதல் சாம்ராஜ்யத்தின்
குடிமகன்களாக நாம் இப்போது.

இந்த எல்லைகளற்ற தேசத்தில்
நாமும் பதிப்போம் நமது சுவடுகளை
சற்று அழுத்தமாகவே!!!


Lovers- பெப்பின் ([email protected])


படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X