கைம்பெண்-ப்ரியன்
Subscribe to Oneindia Tamil
குங்குமம் தவிர்த்து
ஒட்டுப் பொட்டைத்
தேடும் நேரம்!
மனதுக்குப் பிடித்த
மல்லிகை தவிர்த்து
வாசம் குறைந்த மற்றப்பூ
நாடும் நேரம்!
பேருந்தில் முட்டி மோதி
அங்கம் யார் மேலும் படாமல்
செளகரியமாய் ஓரிடம்
கண்டு நிற்கையில்
எவனோ ஒருவன்
கம்பளிப்பூச்சி பார்வையில்
மார்பகம் தீண்டப்படும் நேரம்!
மாதாமாதம் விலகி நிற்கும்
முன் இருநாள்
பின் இருநாள்
பெண்மை பொங்கி
கொல்லும் நேரம்!
ஆசிரியர் அப்பாகிட்டே
கையெழுத்து வாங்கிட்டு
வரச் சொன்னாங்க!
அறியாப் பிள்ளைகள்
மதிப்பெண் பதிவேட்டை
நீட்டும் நேரம்!
இவை தவிர்த்து
எப்போவது தான்
வருகிறது உந்தன்
ஞாபகம்!
என்றாலும் இன்னும்
சில காலம்
உயிருடன் இருந்திருக்கலாம்
நீ!












Click it and Unblock the Notifications