பிரபஞ்சத்தின் சொந்தக்காரன்- ப்ரியன்
Subscribe to Oneindia Tamil
இந்திய எல்லையில்
அத்துமீறிப் பறந்த
பாகிஸ்தான் விமானம்
சுட்டு வீழ்ப்பு!
தமிழ்நாட்டிற்கு
தண்ணீர் தர அனுமதியோம்!
கர்நாடக விவசாயிகள்
சாகும்வரை உண்ணாவிரதம்!
ஏரியா விட்டு ஏரியா வந்து
காதலித்த வாலிபருக்கு
அடி, உதை!
வாய்க்கால் தகராறில்
அண்ணன் தம்பி
வெட்டிக் கொலை!
தாங்கி நிற்கும்
தினத்தந்தி!
சில அடிகள்
நிர்ணயிக்கும் ஒருவனின்
வாழ்வையும், சாவையும்!
யாரோ பேசிக் கொண்டு
நடக்கிறார்கள்!
படித்துக் கொண்டும்
கேட்டுக் கொண்டும்
காலியாகிப் போன
டீ தம்ளரை தரையில் வைத்து
மெலிதாய் நகைத்தப் படியே
மெல்ல கடந்து செல்கிறான்
பிரபஞ்சத்தின்
"சொந்தக்காரன்"












Click it and Unblock the Notifications