இந்திய தேசியம்
நடைமுறை வாழ்க்கையில்
துன்பங்களை மட்டுமே
எங்கள் வரவு செலவு
ஏட்டில் பதிவு செய்து
கொண்டு
இடியும், மின்னலுமாய் வரும்
மழையினை அழகான
வார்த்தைகளால் மாலை
கோர்த்துக்கொண்டிருக்கிறோம்!
வெறும் இரண்டு
கால்களைக் கொண்ட
பெண்ணை கவி பாட
ஆயிரத்து எட்டு கவிஞர்கள்!
அவள் இடுப்பைச்
சுத்தி கமெரா கவிபாடும்!
இயக்குநரின் மிடுக்கான
தேசியம்..இதற்குள்ளே
மிளிரும்!
செப்பணிடப்படாத
தெருவோரங்களில்
நேற்றைய சாப்பாட்டுக்காய்
இன்றும் எங்கள்
உறவுகள்
தேடியழைகின்ற போது
மேடைகளில்
மூச்சு விட மறந்தாலும்
முன்ன்னூறு தரம்
தேசியமே மூச்சு என
முழங்கு தெருவுக்கு
ஒரு கூட்டம்!
ஒவ்வொரு
வாக்குச்சாவடிகளிலும்
பகல் கனவு காணும்
எங்கள் உறவுகள்!
மாற்றம் மட்டும்
ஏதோ
மை போடுவதற்கு பதிலாய்
குத்துவதாக
உயர்வு அடைந்திருக்கிறது!
எதிர்பார்ப்பு, ஏமாற்றம்
மாறி மாறி சுழன்றடிப்போம்
களைப்பு மட்டும்
எமக்கு வந்ததாய்
எமக்கு வரலாறு சொல்லாது!
தேசியம் வளர்ப்பதாய்
சொல்லி, எழுதி, பேசி
ஒருவருக்கு ஒருவராய்
அடிபடும் அரசியல்
கட்சிகள்!
வெட்டுக் கொத்து,
உயிரையும் கொடுக்கும்
கட்சித் தொண்டர்கள்!
அழகான கோபுரம்
பணக்காரத் தோற்றம்
இதன் இடையில்
பெண் இரவில்
நடந்து திரிவதாய்
கற்பனை தாண்டிய
கம்பனை வென்று,
தேசிய வாதம்
பேசும் அழகான
தமிழ்ப் படங்கள்!
அடிக்கடி கார்க்கிலில்
கலாய்த்தல் பண்ணி
தேசியத்தை தாலாட்டி
தடுமாறும் அரசுகள்
தம்மை நிலையாக்கிக்
கொள்ளும்!
மத்தியில் இருப்போர்
தம் வயிறு நிரப்பி
அதன் பின்னே
அழகான தேசியம்
இதுவே அறுபதில்
அண்ணா பேசிய
தேசியமும்!
பொடாவும், கவர்ச்சியும்
இரு கண்களாய்
வழி நடத்த
அழகான அவர்தம்
தேசியம் பாசிச வாதிகளின்
அரவணைப்பில்
நடைபயிலும்
விழிப்பவர்களை
காவு கொடுத்து
தேசியத்தின் ஆயுளை
உறுதிப்படுத்திக்
கொள்வார்கள்
விழிப்பது
தேசக் குற்றமாய்
பிரகடனப்படுத்த
சட்டங்கள்
பயன்படும்!
ஆனாலும்
ஒரு நாள்
அணுகுண்டு வெடித்து
அனைத்தும் அழியாத
பொழுதில் தேசியத்தின்
இலக்கணம் மாறும்!
அப்போ!
தெற்கில் இருந்து
வேர் விடும் ஆலமரத்தின்
நிழலில்
உயிர்பெற்று எழுவோம்
அது வரைக்கும்
மாயை உலகில்
இந்திய தேசியம்
கதைத்து திரிவோம்!!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications