தைரியம்- ரம்யா
Subscribe to Oneindia Tamil
அன்றே சொல்லி இருக்கலாம்
நீயோ அல்லது நானோ
நான் உன் மீதும்
நீ என் மீதும்
வைத்திருந்த காதலை!
இன்று உன் திருமண பத்திரிக்கை
கொடுக்கும்போது - உனக்கும்
வாங்கும்போது - எனக்கும்
வெளி வந்த ஒரு துளி
கண்ணீருக்கு இருந்த
தைரியம் - ஏனோ
அன்று நமக்கு
இல்லாமல் போனது விந்தைதான் !












Click it and Unblock the Notifications