கூண்டுகளில் சமாதான புறாக்கள்ரிஷி சேது
கூரிய கத்தியோ
சைக்கிள் செயினோ
அல்லது கொஞ்சம்
பெரிதாய் துப்பாக்கியோ
நீங்கள் கட்டாயம் வைத்திருக்கப்போகீறீர்
நானும்
சற்றேரக்குறைய மேல் சொன்னவையோ
அல்லது கையடக்க
பென்சில் துப்பாக்கியோ,
நாட்டு வெடிக்குண்டோ
வைத்திருக்கக் கூடும்
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய்
நாம் தீவிரவாதம் கற்கிறோம்
நமக்கான பேச்சுவார்த்தைகளின் போது
பறக்கவிடும் புறாக்கள் மீண்டும்
கூண்டிலடைக்கப்படுகின்றன
நம் பேச்சிக்கிடையே வைக்கப்பட்டிருக்கும்
பூங்கொத்துக்கள் கருகிப் போகின்றன
நமக்கான சமாதான முகங்கள்
ஒளிந்துகொள்கின்றன
நம்புங்கள் பேச்சுவார்த்தையின்
விளைவாய் ஏதேனும் உடன்படிக்கை
ஏற்பட்டாலும்-அது
என்னை தயார்ப்படுத்திக்கொள்ளவேயன்றி
வேறில்லை
நம் குழந்தைகள்
அணுகுண்டோ அல்லது
ரிமோட்டிக் வெடிகுண்டோ
வைத்திருக்கலாம்- இங்கே
பாதுகாப்பென்பது- உன்னைவிட
பலமான ஆயுதம் வைத்திருக்கிறேன் என்பதுதான்
தீவிரவாதமென்பது
சமாதானத்திற்கு எதிரானது மட்டுமல்ல
நம் மீதான அவநம்பிக்கையும் தான்
ஒரு வேளை இதெல்லாம்
வெறும் கற்பனையென்றால்- எனக்கு
நிஜம் குறித்த சந்தோஷமும்
ஆமெனில்
மனிதனெனும் மிருகமும்
சூரிய குடும்பத்தின் ஒரு மிகப்பெரிய
கோளும் அழிய போவது உறுதி...
இப்போது
இதை
இங்கு
முடிவு செய்வோம்
வாழ்வோமா? சாவோமா?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications