For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடைபாதைத் தொழிற்சாலைகள்

By Staff
Google Oneindia Tamil News
Womanஅவர்கள்
தெருவோரத்து
தொழிற்சாலைகள் ..

"பத்தினித்தனம்" செத்து விட்ட
முதல் நாளின் மலர்களைச்
சிக்குத் தலையில் சுமந்து கொண்டு

சரிந்து கொண்டிருக்கும்
"லதனங்களை"
கடைபாடிகளில்
நுழைத்துக் கொண்டு ..

இருட்சந்தின் மூலைகளில்
காலியான இரைப்பையின்
"சங்கேதத்தை"
வெளிப்படுத்துகின்ற
அவர்கள் ...!

"தெருவோரத்துத்
தொழிற்சாலைகள்"

அவர்களுடைய
கர்ப்பப் பைகள்

பட்டம் பெறாத
"மருத்துவச்சிகளால்"
டெட்டால் வாசனை
அறிந்திராத
குடைக் கம்பிகளைக்
கொண்டு
அடிக்கடி
சுத்தீகரிக்கப்படுகின்றன

ஆனாலும் ...!
எப்படியோ
சில வேளைகளில்
அந்தத் தொழிற்சாலைகளுக்கும்
சில ..
"கிளை நிறுவனங்கள்"
ஏற்பட்டு விடுகின்றன ...

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X