எண்ணமெல்லாம் ...- ஷைலஜா
Subscribe to Oneindia Tamil
உன்னை மறக்கத்தான்
ஓவியம் தீட்டுகிறேன்!
வண்ணக் குப்பிகளை
வரிசையாய் வைத்துக் கொண்டு,
தூரிகை தீட்டி
காரியமே கண்ணாக இருக்கிறேன்!
முழுதும் முடிந்த பின்னர்தான்
உணர்கிறேன் ..
சித்திரத்திலே இருப்பது
உன் முக முத்திரை என்பதை!
நான் வரைந்ததென்ன
வண்ணத்திலா,
உன்னைப் பற்றிய
எண்ணத்திலா?
- ஷைலஜா([email protected])












Click it and Unblock the Notifications