சிவப்பு விளக்குப் பகுதியும் பிரசுரிக்கப்படாமலேயே தொலைந்துபோன கவிதையும்!
பாகம் (1)
திருவிழா முடிந்து போன
வெறுமைத் தெருவின்
மெல்லிய காற்றுச் சத்தம்
நண்பர்கள் அகன்றுவிட்ட
பின் மாலைப் பொழுதில்
இன்னும் விளக்கேற்றப்படா
மெல்லிருள் முற்றத்தில்
மரக்கிளையின் சலசலப்பு
. மாயப் புள்ளிகளை
மையங்களாக்கி
மகிழ்வின் மர்மக் கோட்டைகளாய்
வாழ்க்கைத் திட்டங்கள்.
பிரசுரிக்கப்படாமலேயே
தொலைந்துபோன கவிதையாய்
உனக்காக என்னுள் எழுந்த
சில தற்காலிக உணர்வலைகள்.
ஓரு வரலாற்றுப் புரட்சியின்
தடங்கள் தெரியாமல்
சுவடுகள் துடைத்தெறியப்பட்ட
சிக்காக்கோவாய் உன் மனது.
ஆனாலும், இன்னும் ஒரு ஏழைத்
தொழிலாளியாய் நான்.
பாகம் (2)
சிவப்பு விளக்குப் பகுதி
நெருப்பின்
ஊழி நடனமிட்டெரியும்
நெத்தி நரம்புகள்
அழகிய இரவு - தெருவின்
சிவப்பு விளக்குப் பகுதி
சிறு பொழுது தாமதிக்கும்
என் வாகனம்
இருக்கைச் சாளரத்தினூடு
கை நீட்டிக் குளிர் விரலால்
நெற்றி வருடித் தலைகோதும்
மெல்லிளம் காற்று
குளிர் என்று சொல்லி ஜன்னல்
சாத்த மனம் இல்லை
என் முகம் வருடித் தலைகோத
இக்காற்றும் இல்லை என்றால்..?
இப்போ பச்சை விளக்கு
பின்னால் உறுமும் வாகனங்கள்
தவிர்க்கமுடியா நகர்வுக்காய்
அழுத்தும் என் கால்கள்.
பாகம் (3)
பாதைகள்
முயலாததாலேயே
பல பாதைகள்
இல்லாததாய்
கட்டாயப்படுத்தல்களால்
கண்டுகொள்ளபட்டவையாயும்
சில பாதைகள்
பாகம் (4)
சிரித்தல்
காரணத்தோடு சிரிக்க
எனக்கும் ஆசை
ஆனால் காரணங்கள்
அடிக்கடி களவாடப்படுகிறது
அபகரித்துப் போனவர்கள்
திருப்தியில் சிரிக்கிறார்கள்
இனியும்
காரணங்களைத் தேடின்
சிரித்தல் சாத்தியமில்லை
இப்போ காரணமின்றிச் சிரிக்கிறேன்
தெருவோரப் புழுதியில் இருந்தபடி,
குழந்தைககளின் கல்லெறியையும்
கண்டுகொள்ளாமல், சிரிக்கிறேன்
இச்சிரிப்பின் காரணங்களை
யாரும் களவாட முடியாது என்ற
காரணத்தால் சிரிக்கிறேன்
அபகரித்துப் போனவர்களும்
வீதியில் போகிறார்கள்
திருப்தியில் சிரித்தபடி
பாகம் (முடிவிலி)
எங்கோ தூரத்தில்
கட்டிடங்களில் கசியும்
மின் ஒளி.
இன்னும் லேசாகக் கேட்கும்
வாகன இரைச்சல்.
தவிர
எங்கும் அமைதியான இருள்.
முகத்தை மெல்ல வருடும்
மெல்லிய குளிர் காற்று.
உங்களுக்கு நன்றி.
நிறையும் அமைதி என்னுள்
உங்களுடன் இருப்பதனால்.
நீங்கள் நல்லவர்கள்.
முழுதாய் நம்புகிறேன்.
நடித்துச் சிரித்து
நெளிந்து குழைந்து
நம்பவைத்து ஏமாற்றும்
குணம் இல்லை உங்களுக்கு.
உங்களால் எனக்கு
ஏமாற்றம் கிடையாது.
அடக்கமானவர்கள் நீங்கள்.
பதிலுக்குப் பேசாததால் அல்ல.
ஆழத்தால், நிறைந்து
அடக்கமானவர் என்பதனால்.
எனக்கு நீங்கள்
தொல்லை தருவதில்லை.
மூச்சுச் சத்தத்தால் கூட.
என்னோடு போட்டியிடா
உங்கள் பெருந்தன்மை
என்னுள் மகிழ்ச்சி தரும்.
எனக்குப் பொறாமை
உங்களுக்குள் உள்ள
ஒற்றுமையைப் பார்த்து
. இன்றைய பகலில்
உங்களுக்குச் சூட்டப்பட்ட
பூக்களின் வாசனையும்
திராவகங்களின் வாசனையும்
என்னைச் சூழ்ந்த காற்றுள்
இன்னும் நிறைந்து
சுகமாய்...
உங்களோடு சேர்ந்து
இன்று மட்டும் என்றாலும்
துயில் கொள்ள ஆசை.
நிரந்தரமாய்...........?
இது பேராசை.
இடுகுழி மரத்தினின்று
மயானக் குருவிகள்
அலறிக் கலைகிறது.
மயானக் காவலன் வருகிறான்
அவன் என்னைத் உங்களுடன்
இம் மயானத்தில்
தூங்க விடமாட்டான்
அவன் மனிதன்.
நவீனத்துவ வரைவிலக்கண
எல்லைகளுக்குள்ளான மனிதன்.
நன்றி: முழக்கம்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications