கொண்டு வந்தவை
பசிக்கிறது என்றபடி வந்தார்கள்
முதுகுச்சுமையைக் கழட்டி வைக்கிற
அவசரத்தில் வந்தார்கள்
மார்க்குகளைச் சொல்லி
மகிழ்கிற வேகத்தில் வந்தார்கள்
குறைந்துபோன மார்க்குகளுக்குக்
காரணம் தேடுகிற தயக்கத்தில் வந்தார்கள்
மாலையில் விளையாடப் போகிற
அவசரத்தில் வந்தார்கள்
ஆசிரியைகள், தோழர்கள் பற்றிய
கதைகளுடன் வந்தார்கள்
உடற்பயிற்சி வகுப்பில் ஓடும்போது
அடிபட்டுக்கொண்ட காயத்துடன் வந்தார்கள்
வீட்டுப் பாடம் செய்யவேண்டுமென்றும்
வகுப்புத் தேர்வுக்குப் படிக்க வேண்டுமென்றும்
கடமைகளுடன் வந்தார்கள்
வருகிற விடுமுறை குறித்தான
உற்சாகத்துடனும் கனவுகளுடனும் வந்தார்கள்
நண்பனுடன் சண்டை போட்டுவிட்டு
நட்பைப் பற்றிய குறைகளுடன் வந்தார்கள்
வகுப்புத் தோழர்கள் வைத்திருக்கிற
விளையாட்டுப் பொருள்கள் வேண்டுமென்ற
கோரிக்கைகளுடன் வந்தார்கள்
எதுவும் எடுத்துவராமல்
சொல்வதற்கு ஒன்றுமில்லை என்கிற
முதிர்ச்சியுடன் வந்தார்கள்
எதையெடுத்துக் கொண்டு
உள்ளே நுழைந்தாலும்
இல்லாமல் போயிருந்த
புதிய சந்தோஷம் ஒன்றையும்
ஒவ்வொருமுறையும்
உடனழைத்து வந்தார்கள்
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications