கவலை அறியாத கவலை
Subscribe to Oneindia Tamil
பலத்த மழை
போக்குவரத்து நெரிசல்
வாகன நெருக்கடி
வாகனங்களின் உள்ளிருந்து
கடுப்பான முகங்கள்
வானொலி கேட்கிற முகங்கள்
முன் கண்ணாடியின்மேல் தெறித்து விழுந்து
வைப்பரில் அடிபட்டு விலகுகிற
மழையைப் பிடிக்காமல் பார்க்கிற முகங்கள்
நின்று நின்று மெதுவாய் ஊர்கிற வேதனையை
செல்போன்களில் தொலைத்த முகங்கள்
உள்ளிருக்கும் முகங்கள்
எவற்றிலும் இல்லை
மழையில் நனையாமல் வேடிக்கை பார்க்கிற கவலை
பணியில் இருக்கும்போதும்
மழைப் பொழுதுகளை நனைந்தபடி
நின்று நின்று அனுபவிக்கிற
வாகனங்களுக்குமில்லை
தம் உரிமையாளர்கள் நனையவில்லையே என்ற கவலை












Click it and Unblock the Notifications