For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரு நிமிட உலகம்

By Staff
Google Oneindia Tamil News
Sea
இது உள்ளுக்குள் நடந்த ஒரு உட்பூசல்!
கல்லுக்கும் கல்லுக்கும் நடந்த ஒரு கருத்து வேறுபாடு
விளைந்ததோ ஒரு இயற்கை மாறுபாடு!

இது மண்ணுக்குள் நடந்த
அடுக்குப் போராட்டம்- அதன்
தொடக்கமாய் விசை நீரோட்டம்!

நீரும் காற்றும் நிலத்துடன்
நடத்திய பூதப்போராட்டம்- இதில்
மனித உயிர் ஆட்டம்!

துளிகளுக்குள் இப்படி ஒரு துணிச்சலா?
கண நேரத்தில் பிணங்கள்! பிணங்கள்!

கடலுக்குள்ளிருந்து நீ கரையில் வந்ததெதற்கு?
குடைக்குள்ளிருந்த எங்களை நனைத்ததெதற்கு?

காலால் உன்னைத் தீண்டியவர்களை
காலனாய் கவர்ந்தாயோ?
தாயாய் உன்னை தொழுதோரின்
தாழியாய் மாறிவிட்டாயே!

சிலை கொண்ட கடலைத்தான் பார்த்திருக்கிறோம்- இன்று
அலை கொண்ட கடலை பார்த்தோம்
உன் முகத்தில் கரையை பார்த்தோம்!

தினமும் சூரியனை விழுங்கிய நீ
இன்று ஏன் வித்தியாசமாய் மனிதர்களை விழுங்கினாய்?
மாற்று உணவு வேண்டுமென்றா?

மணலை எண்ணும் நீ ஏன் மனிதர்களை எண்ண ஆரம்பித்தாய்?

உயிரை திருப்பினாய்!
உடைமையை திருப்பினாய்!

முடிந்தால் திருப்பி விடு
அந்த ஒரு நிமிட உலகத்தை!

- சந்தர் சுப்பிரமணியன்([email protected])

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X