விமர்சகன் பேசுகிறேன்- மா.வீ. தியாகராசன்
Subscribe to Oneindia Tamil
பால் சுவைதான்
ஆனாலும் ஒரு குறை
அது பசுவின் இரத்தமல்லவா?
தேன் சுவைதான்
ஆனாலும் ஒரு குறை
அது தேனீயின் எச்சிலல்லவா?
ஊன் சுவைதான்
ஆனாலும் ஒரு குறை
அது உயிரின் துடிப்பல்லவா?
மீன் சுவைதான்
ஆனாலும் ஒரு குறை
அது நீரின் தொட்டியல்லவா?
நிறுத்து விமர்சகனே!
அதனால் நீ
உண்ணாமல் இறந்து போ! போ!
சூரியன் அழகுதான்
ஆனாலும் ஒரு குறை
சுட்டுப் பொசுக்குகிறான்!
மழைத்துளி அழகுதான்
ஆனாலும் ஒரு குறை
மண்ணைச் சேறாக்குதே!
மேகங்கள் அழகுதான்
ஆனாலும் ஒரு குறை
மின்னி இடிக்குது பார்!
கோலங்கள் அழகுதான்
ஆனாலும் ஒரு குறை
புள்ளிகளைச் சிறைப்பண்ணுதே!
கடல் அழகுதான்
ஆனாலும் ஒரு குறை
உப்பு கரிக்கின்றதே!
விமர்சகனே! நீ நல்லவன்தான்!
ஆனாலும் ஒரு குறை
அதிகம் பேசுகிறாய்!












Click it and Unblock the Notifications