சிங்கப்பூர்- மா.வீ. தியாகராசன்
Subscribe to Oneindia Tamil
தென்கிழக்காசிய நாடுகளின்
வேலைவாய்ப்பு மையமே!
வெளிநாட்டு விமானங்களின்
வேடந்தாங்கலே!
அடுக்குமாடி வீடுகளின்
அலங்காரக் கூடமே!
முகில் வந்து முகம் துடைத்து
முட்டிச் செல்லும் முகட்டினை
உடைய மோகன கூடாரமே!
பூக்களால் பூவையரையும்
பூமணத்தால் ஆடவரையும்
போகத்தில் முழ்க வைக்கும்
பூங்கா நகரே!
உறக்கத்தில் உலகமே ஆழ்ந்த போதும்
உறங்காமல் கண் விழித்து
உழைக்கும் உன்னதமான
தொழிலாளர்களைக் கொண்ட
தூங்காத் துறைமுகமே!
உலக வரைபடத்தில்
சிறுபுள்ளியாகக் காட்சி தந்தாலும்
உலகோர் மத்தியில்
பெரும்புள்ளியாய்த் திகழும் உல்லாச நகரே!
இந்தச் செப்படி வித்தையை
நீ ! எங்குக் கற்றாய்?!












Click it and Unblock the Notifications