எங்களை உருக்குலைய வைத்த சுனாமியே!
ஆண்டாண்டுக் காலமாய்
ஒத்திகை பார்த்து
அசுர வேகத்தில் எங்கள்
உசிரைக் கவர்ந்து விட்டாய்!
அரங்கேற்றம் நடத்தி விட்டாய்!
நீ அநியாயம் புரிந்து விட்டாய்
சாதிவெறிக்கும் மதவெறிக்கும்
பாடம் புகட்டவா ஒரே குழியில்
உடல்களைப் புதைத்தாய்?
உயிர்களை அழித்தாய்!
ஏ சமுத்திர ராஜனே!
உன் அதிரடி அலைகள்
செய்த அடாவடிக் கொலைகள்
பார்த்தாயா?
உன் திரவக் கைகள் செய்த
திராவகக் கொலைகளைப் பார்த்தாயா?
இது உடற்கொள்ளை அடித்த
கடற்கொள்ளையா?
உப்பு மணலில்
இரத்த வாடை அடிக்கிறது!
எங்கள் உடல்களைத் தின்றுவிட்டு
ஒப்பாரி வைக்கின்றாயே!
பூனை போல வந்து
புலி போலப் பாய்ந்து
பூகம்பம் நடத்தி விட்டாய்
கண் மூடும் நேரத்திற்கெல்லாம்
உயிர்களை மண்மூடி
மாய்த்து விட்டாயே!
அகத்தியரே கடல் நீரைக்
கமண்டலத்தில் அடைத்திட வாரும்
பாற்கடலைக் கடைந்த
பரமனே வாரும்
இந்தப் பாவிக் கடலைக்
கடைந்திட வாரும்!
பணக்குவியலைப் போல இந்தப்
பிணக்குவியலைப் பார்த்தாயா?
இத்தனை உடலங்களைத்
தின்றதற்குப் பெயர் நிலநடுக்கமா?
ஐயோ இது அடுக்குமா?
சமுத்திரத் தாயே
உங்கள் கடல் மீன்களை
நாங்கள் கவர்ந்ததற்கா
எங்கள் உடல் மீன்களைக்
கவர்ந்து சென்றாயா?
ஓ இயற்கையே!
சுனாமி என்ற பினாமி மூலம்
கடற்கரை நிலங்களைக்
கவர்ந்து சென்றாயே!
நிலத்தைத் திருடவந்த நீ
உயிர்க் குலத்தைத்
திருட வந்ததேன்?
சுறா மீனாய் வந்த சுனாமியே
திசைகளை அழித்த தீவிரவாதியே
உன்னிடம் உப்பிருக்கிறது
நன்றியில்லையே?
நெய்தல் நிலங்களைக்
கொய்து கொண்டாயே
கடற்கரைப் பூக்களைக்
கவர்ந்து சென்றாயே
ஐயோ!
பாடை கட்ட ஆள் இல்லை
பறையடிக்க காலமில்லை
ஊரையே அழித்து விட்டாயே
ஒப்பாரி வைக்க விட்டாயே!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications