ஈர நினைவுகள்- உங்கள் தோழி
Subscribe to Oneindia Tamil
கடைசி நிமிடம்!
கண்களில் கலை கலைந்து
நிஜத்தை நினைந்த நிமிடம்!
எனது என்று சொந்தம் பேசி
கட்டித் தழுவிய உன்னை
அந்நியனாக விட்டு விலகிய நிமிடம்!
கண்களில் வலி!
கன்னத்தில் ஈரம்!
ஈரம் ! உனது இதழ்கள்
வரைந்த கோலம் அல்ல!
என் இதயம் வரைந்த சுவடுகள்!
காலப் போக்கில் கரைந்து விட்டது ஈரம்!
காலம் கடந்தும் கரையாத கோலமாய்
உன் நினைவுகள் மட்டும்
இன்றும் என்னிடம்!
- உங்கள் தோழி([email protected])












Click it and Unblock the Notifications