காதல் குற்றவாளி
காலமும் உன் சேவகன் என்று
நான் சொன்னதை நினைத்து
என்னை மண்டியிட வைக்க முயலாதே!
என் அன்றைய
கவிதையின் கங்கோத்திரியே!
மனங்களின் வக்கிரங்களுக்கு
நாம் மரண தண்டனை வழங்கினோமே!
நீ மட்டும் ஏன் தன்னிச்சையாக
உன்னவற்றுக்கு ஆயுள் தண்டனையாக்கி
நீ அவற்றிடம் ஆயுள் கைதியானாய்?
உன் சிறைக் கம்பிகளின் நெருக்கம்
காற்றுக்குப் போகக் கஷ்டம் தரலாம்.
என்னை எப்படி அடக்கிவிடும்?
உன் பூட்டுக்களுக்குச் சாவி செய்து
உன் உள்ளறைகளை உனக்கு
ஒழுங்கு செய்யச் சொல்லித் தந்த என்னை
உன் பிரிய வஸ்துவாக மாற்ற முயலாதே!
பகுபத உறுப்பிலக்கணமும்-
சந்தியும், புணர்ச்சி விகாரங்களும்
அறிந்து கொண்டவன் நான்.
என்னை உன் சாரியை ஆக்க முயலாதே!
என் உடலைப் போகத்துக்குத்
தடுப்புச் சுவராக்கிக் கொண்டு,
உன் உடலைச் சிறைச் சாலையின்
சுவரென்று உணர்ந்துவிட்டவன் நான்.
இலவச நுழைவுச் சீட்டாய்
வீசும் உன் புன்னகைகள் என்னைப்
பொன் விலங்கிட்டு,
வெள்ளிக் கூண்டிலிட்டு,
வைரம் பதித்த சாட்டையாலடிக்கத்தானே
துரத்தித் துரத்தி அழைக்கிறாய்?
என் வார்த்தைகளுக்கு வியாக்கியானங்கள்
எழுதி என் மீது வீசாமல்
உனக்குள் எட்டிப் பார்த்து
நான் சொல்வதை யோசி!
என்னை நானாகப் பாரேன்!
புரிகிறதா? முடிகிறதா? வா!
- திருத்தக்கன்([email protected])
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications