எனது பேனா...!
எனது
பேனா கூரானது
எனது
கைகளில் உள்ள
துப்பாக்கியைப் போல
ஆனால்
துப்பாக்கி
சன்னத்தை மட்டுமே துப்பும்
என் பேனாவோ
சகலத்தையுமே கக்கும்!
எந்தப் போட்டிகளிலும்
கலந்து கொள்ள எனது
கவிதைக்கு அனுமதியில்லை
ஆனால்
எமது உணர்வுகளை
அவமரியாதை செய்து
அனுமதி வழங்கத்
தவறும் இடங்களில்
எனது பேனா
உத்தரவின்றி
உட்பிரவேசிக்கும்!
பாரட்டுக்களோ
அன்றி பரிசுகளோ
என் கவிதையை
பரவசப்படுத்துவதில்லை
ஏனெனில்!
மிக உயர்ந்த பரிசும்
மிக....... மிக........ உயர்ந்த
பாராட்டும் அன்று
என் கவிதைக்கு
கிடைத்ததால் தான்
இன்று என் கவிதை
பரிசுத்தமாய் இருக்கிறது.
எனது
பேனா கூரானது!
எனது
கைகளில் உள்ள
துப்பாக்கியைப் போல!!
எந்த கலாநிதியுடனும்
எந்த வித்துவானுடனும்
எந்த பண்டிதருடனும்
என் கவிதை சவால் விடும்
ஏனெனில்
எனது பேனாவில்
உணர்வுகள்
உயிருள்ளவை!
எமது
உணர்வுகளை
கொச்சைப்படுத்தும்
சில பேனாக்களுக்கு
ஓர் வேண்டுகோள்!
முகவரி தாருங்கள்
உங்கள் முகத்திரையை
என் பேனா கிழிக்கும்!
எனது பேனா
கூரானது!
எனது கைகளிலுள்ள
துப்பாக்கியைப் போல
எனது துப்பாக்கி
எதிரியை மட்டுமே
குறி பார்க்கும்.
எனது பேனாவோ
எல்லாவற்றையும்
பதம் பார்க்கும்!
எனது
பேனாவின்
நினைவுகளின்
இறந்தகாலம்
நிகழ்வுகளின் நிகழ்காலம்
எனது
பேனாவின்
நினைவுகளின்
நிகழ்காலம்
நிகழ்வுகளின் எதிர்காலம்
புரியவில்லையா
என் கவிதைகளை
நீ புரியவில்லை!
இது
எனக்குக் கிடைத்த
வெற்றியல்ல!
எனது
கவிதைக்குக் கிடைத்த
வெற்றியுமில்லை!
எனது
பேனாவின் வெற்றிகள்
எனது கைகள்
நாளை ஓயலாம்
அன்றி ........ ஒடியலாம்
ஆனால்
எனது பேனாவோ
ஓயப் போவதில்லை
எமது துப்பாக்கியைப் போல!!!
மன்னார் அனுபவத்தின் பின்
எனது பேனா கூரானது
கைகளிலுள்ள
துப்பாக்கியையும் விட
எனது பேனா கூரானது.
-
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications