குறைகள் தீர்க்கப்படலாம்
ரோசாப்பூ நிறத்தில் பிறந்ததாய்
பெருமிதம் கொள்ளும் தாய்
குறி பார்த்து சொன்னேனே
கறுப்புத்தானென்று குதர்க்கமாய்
அண்டை அயலார்
மேல்சாதிக்காரனென்று இல்லாத திமிரை
ஏற்றி உரைத்தார்கள்
கோட்டாவில் மிஞ்சியது கிட்டாதென்று
படிப்பின் வேகத்தை பன்மடங்காக்கினார்கள்
குறைகளே சமூகத்தின் பிரதானமா?
குறைக்கண்ணாடியுடன்தான் பிறந்தோமா?
இது என் குறையா?
இல்லை உன் குறையா?
யாரை நான் குறை சொல்ல?
அடுத்தவன் குறைகளை
அளந்து பார்க்கவா இப்பிறவி?
குறைகளைக் குற்றங்களாய்
நான் பார்த்ததேயில்லையே
கார் பங்களாவென்று மனையாளின் குறை
அழகுச் சாதனங்களுக்கு மகளின் குறை
பைக்காவது உண்டா மகனின் குறை
மகளுக்கு ஆண்மகவில்லை அன்னையின் குறை
குறைகள் மிகுதியென்ற அப்பாவின் குறை
குறைகளோடு நித்தம் குடித்தனமே நடத்துகின்றார்கள்
நிறைகள் மட்டும் தூரத்து அநாதைகளாய்
எவ்வளவு நல்ல மனுஷன்
சூழ்ந்த பனிக்கட்டிகள் மத்தியில்
சில்லென்ற வார்த்தைகள் செவிகளில் முதன்முறையாய்
உணர்ச்சி தொலைத்து சலனமின்றி நான்












Click it and Unblock the Notifications