For Daily Alerts
Just In
எல்லாம்தான்....
கையசைத்துவிட்டுப்போன கல்லூரித்தோழன்
சாலையில் கண்ணெதிரே வந்த எமனை
கவனித்திருக்கலாம்தான்!
முதல் சம்பளத்தில் புடவை கேட்ட
ஒன்றாம் வகுப்பு டீச்சர்
இன்னும் ஒருநாள் கூட இருந்திருக்கலாம் தான்!
அப்பா வைத்தியச் செலவுக்கு
வேலைக்குப்போய் சம்பாதிக்கவாவது
நான் இன்னும் இரண்டு வருடம்
முன்னமே பிறந்திருக்கலாம் தான்!
நல்லதையும் கெட்டதையும்
அன்பையும் அழுகையையும்
பகிர்ந்கொள்ளவாவது....
உண்மையாய் என் உணர்வுகளை
உரிமைகொள்ளவாவது....
இன்னமும்
என்னருகில் நீ இருந்திருக்கலாம் தான்!
உனக்கு, இன்னும் கூட சில காலம்
என்னைப் பிடித்திருக்கலாம் தான்!
Comments
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]