என் புகைப்படங்கள்- வீரமணி இளங்கோவன்
யத்தனிப்பில்லாத சமயங்களில்
பதிவு செய்யப்பட்ட ஓரிரண்டைத்தவிர
மற்ற எல்லாப் புகைப்படங்களிலும்
வெளிப்படையாகவே தெரிகிறது
என் போலித்தனம்!
சிரிப்பது போன்றோ
இயல்பாக இருப்பது போன்றோ
சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிற
ஒரு மன்னனுக்கான கம்பீரத்தையோ
என் புகைப்படங்கள் காட்டமுயன்றாலும்
இவையெல்லாவற்றையும் விடத்
தூக்கலாகத் தெரிபவையென்னவோ
இந்தப் பாவனைகளுக்கான என் மெனக்கெடல்கள் தான்!
பக்கத்து வீட்டுக்காரனிடமும்
என்னைப்பிடிக்காத சொந்தக்காரனிடமும்
காட்டகொள்ளவேண்டிய அவசியத்திற்காக
நான் மிகுந்த உல்லாசமாய் இருப்பதுபோன்று
புகைப்படம் எடுக்க முனைந்ததில்
சுற்றுலாவுக்குச் சென்ற இடங்களை
ஒழுங்காகப் பார்க்காமல் வந்தது
இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது!
திருமணங்களுக்கோ
வேறெதாவது விழாக்களுக்கோ
அணிந்து செல்வதற்காகவே
பிரத்யோகமாக நாலைந்து முழுக்கைச்
சட்டைகளை வாங்கிவைத்துள்ள எனக்கு
என் மாமனார்
கோட் வாங்கித்தந்தது
புகைப்படங்களுக்காகவேயன்றி
எனக்காக அல்ல!
நான் எவ்வளவு அழகாக இருந்திருக்கிறேன் பார்
என இரண்டாம்வகுப்பில் எடுத்த என் புகைப்படத்தை
மனைவியிடம் காட்டியதைத் தவிர்த்து
இதுவரை வேறெந்தப்பயன்பாடும்
இருந்ததாகத் தெரியவில்லை
என் புகைப்படங்களினால்...
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications