தழைக்குமா தமிழ்?
"டாடி என்றே அழைக்காதீர் இனிமை தோய
தண்டமிழில் "அப்பா வென்றழைத்திடுங்கள்!
"மீடியா என மொழிய வேண்டாம் நல்ல
மென்தமிழில் "ஊடகங்கள் எனக் கூறுங்கள்
"பாடி என்றே சொல்லாதீர் அழகாய் நந்தம்
பழந்தமிழில் "உடலம் என்றே கூறிடுங்கள்!
"சூப்பர் என்றே ஏன் பேச வேண்டும்? சொந்தச்
சுவைத்தமிழில் "மிகநன்றே என்றால் என்ன?
"பேப்பர் என்றே ஏன் மொழிய வேண்டும்? பேசும்
பேச்சினிலே "தாள் என்றால் தவறா? நாம்
"சாஃப்ட் என்றே ஏன் கூற வேண்டும்? தூய
தாய்த் தமிழில் "மென்மை என்றால் புரிந்திடாதா?
"சேஃப்டியில்லை எனப்புலம்பும் நீங்கள் நல்ல
தேன்தமிழில் "காப்பில்லை என்றால் தப்பா?
"மம்மி என்றே பெற்றவளைப் பிணமாக் காமால்,
மதுத்தமிழில் "அம்மா வென்றழைத்தால் என்ன?
"டம்மி என்றே கூறுவதை மாற்றி, நந்தம்
தண்டமிழில் "போலி என்றே சொலக்கூடாதா?
"செம்மொழியாய் நம்மொழியை அறிவித்தென்ன?
சேய்த்தமிழர் தாய்த்தமிழை மிதித்து விட்டுத்
தம்மொழியாய்த் "தேம்சுமொழியைத் தலையில் வைத்தால்
சாகாமல் தீந்தமிழும் தழைப்ப தெங்கே?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications