என்ன பிழை செய்தோம்?- ரா.விமலன்
இயற்கைக்கும் மனிதனுக்கும் இருக்கும் சொந்தம்
இயங்குகின்ற நிலவுலகில் எதற்கு மில்லை;
செயற்கைக்குள் மனிதன்தான் சிக்கிக் கொண்டு
செம்மாந்த வாழ்வுதனை வாழும் போதும்
இயற்கைதான் அவனுக்குத் தாயாய் நிற்கும்
இயங்குகின்ற வழிதோறும் ஒளியை வீசும்!
இயற்கையைத் தெய்வமென நம்பி வாழ்ந்தான்
இருந்தாலும் பலிகடாவாய் அவனே ஆனான்!
அலைவீசும் கடலைத்தான் அவனிக் கீந்து
அடிவயிற்றுக் கஞ்சிக்கும் வழியைக் காட்டி
கலைபேசும் எழிலுருவாய்க் காட்சி தந்து
களைப்புக்கும் களிப்புக்கும் களமாய்த் தோன்றி
நிலையுயர்ந்த செல்வமென நிற்கும் நங்கை
நீங்காத பெரும்பழியைச் சுமந்து விட்டாள்!
மலையுயரப் பேரலையாம் "சுனாமி" தன்னால்
மாந்தர்தம் உயிர்பறித்தாள் பேயாய் மாறி!
![]() கடலலையில் கிளிஞ்சல்தாம் கரையொ துங்கும் கணக்கில்லாச் சடலங்களின் குவியல் கண்டோம்! சுடலையில் தனிப்பிணந்தான் புதைத்து வந்தோம் சுருண்டுவிட்ட பலபிணங்கள் சுடலை தோறும் படையழிந்த களம்போல காட்சி நல்கும்; பயமூட்டும் பேரலையின் படையெடுப்பால்! நடையழிந்த கிராமங்கள் சிலவற்றோடு நடமாடும் ஜீவன்கள் பலவும் காணோம்! என்னபிழை செய்துவிட்டோம்? இறையே நாங்கள்! செலவுசெய்யும் பொருளாக உயிர்கள் இல்லை; - ரா.விமலன்([email protected]) படைப்புகளை அனுப்ப: கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected] படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். |
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு













Click it and Unblock the Notifications