அப்பாவை இன்னும் காணோம்

Subscribe to Oneindia Tamil


-அனுக்ரஹா

கால்களின் வேகம்
துணிகளைக் காக்கவில்லை
வானம் முந்திக் கொண்டது
மண் மணம்
வினாடியில் இறந்தது

மழையின் ஆதிக்கத்தில்
நிலை தடுமாறிய
மரங்களின் அவலத்தை
வானம் படம் பிடித்ததால்
ஒளிக் கீறல்கள் சிதறின

அடுத்த மேகம் கிளப்பிய கோஷங்கள்
அசுரத்தனமானவை

வானத்தை நோக்கி
மண்டியிட்டிருந்த
பூமிக்கு இந்த
குளிர்ச்சியான இன்பம்
வார்த்தையில் அடங்காது

நானும் கொண்டாடியிருப்பேன்
மழைக்கு முன்பே
அப்பா வீடு
திரும்பியிருந்தால்


-அனுக்ரஹா ([email protected])


(சேலம் மாவட்ட அளவிலான தமிழ் கலை இலக்கிய விழாவில் பரிசு பெற்ற பள்ளிக் கவிதை இது. மாணவி அனுக்ரஹாவை இந்த கவிதையை எழுதத் தூண்டியது ஒரு மே மாத மாலையில் பெய்த திடீர் கோடை மழையாம்)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+