கூட்டம்
Subscribe to Oneindia Tamil
-அனுக்ரஹா
விளையாட்டுக்கள்
நடுவில்:
வம்புகள் பரிமாறப்பட்டன
ஓரத்தில்:
விரோதம்
சத்தமிட்டது
இடையில்:
அழுகையின்
விசும்பல்கள்
அடியில்:
சந்தோஷம்
குதித்தது
மேலே:
நட்பின்
சலனம்
பரவியது
அலைகளாய்:
உறவுகளின்
நெருக்கம்
மலர்ந்தது
மெளனமாய்:
ஊமை
வெறுப்புகள்
வெடித்தன
புன்னகையாய்:
பெருமைகள்
உரைத்தன
உளறல்களாய்
வியக்கும்
குழந்தையின்
விழியில்
தொலையப்போகும்
பயங்கள்:
கூட்டத்தின்
சலசலப்பினாலான
அலைகளில்
மிதந்தேன்
தாமரையாய்:
-அனுக்ரஹா([email protected])












Click it and Unblock the Notifications