மழை வேண்டாம்!!
- முபாரக் ரஸ்வி
பொழிந்ததாம் மழை
மும்மாரி முன்பு!
வேண்டவே வேண்டாம் - என
மனம் வெதும்பியே
சொல்கிறோம்!
ஒரு மணிநேரம்
விடாது பெய்தாலே
வாசல் வழியே
வந்த மழை நீர்
வடிவதற்கு ஆகிறது
மூன்று நாட்கள்!
வருடத்திற்கு ஒரு முறை
சுற்றுலா செல்பவர்கள்..
வெனிஸ் நகராய்
வெள்ளம் சூழ்ந்த
எங்கள் இடத்தை
வேகமாய் பார்க்க வரலாம்...
சுற்றுலாவாசிகள்
வராவிட்டாலும்
சுகாதார அமைச்சர்கள்
சுறுசுறுப்பாய்
சுற்றி வருபவர்கள்
பத்திரிக்கைகளில்
படத்தை பதிவு செய்ய...
சாக்கடைகளும்
சமாச்சாரங்களும்
சகலமாய்
கலந்து வரும்
குடி தண்ணீர்
குழாயிலே...
தரையிலே தடுமாறாமல்
ஓட்டத் தெரிந்தவரை விட
தண்ணீரிலே தடுமாறாமல்
ஓட்ட தகுதியுள்ளவர்கள் மட்டுமே
தங்க வேண்டிய பகுதி இது...
வரும் சுனாமியை
கண்டறியும் கருவியை விட
இருக்கும் பாதாள சாக்கடைகளை
கண்டறியும் கருவி
கண்டிப்பாய் வேண்டும்!
மழை பொழிந்தாலே-எங்கள்
குலை நடுங்கும் - இந்த
மழை எங்களுக்கு
வேண்டவே வேண்டாம்!!
- முபாரக் ரஸ்வி([email protected])
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications