முத்தாசென் கண்ணா கவிதைகள்
பேருந்தில்...
"அனைவருக்கும் கல்வி இயக்கம்"
போர்டுக்கு கீழே
"சார் இஞ்சி மொரப்பா"
-சிறுவனின் குரல்
தொழில்நுட்பம்...
"செம்பருத்தியா வக்கிறது?
சிவனுக்கு ஆகாதே"-என்ற
கோயில் கிழவியிடம்
எப்படி சொல்லி புரிய வைப்பது
இன்று பிரதோஷத்திற்காக
பரமசிவனுக்குப்
பாக்கெட் பாலில்தான்
அபிஷேகம் நடத்தினோம் என்று
கிழிந்த நோட்டு..
இடது வலமாக மடித்தேன்
குறுக்கு நெடுக்குமாக மடித்தேன்
ஓரங்களை மடித்து
நடுவில் விரல் வைத்துப் பார்த்தேன்
எப்படி மறைத்தாலும்
மறைவதாய் இல்லை
பத்து ரூபாய் நோட்டின் கிழிசல்
நேராக மடித்து நிமிர்த்து நீட்டினேன்
கொஞ்சம் கூட சலித்துக் கொள்ளாமல்
சீட்டைக் கி்ழித்தார் நடத்துனர்
எப்படியோ ஏமாற்றிவிட்டேன் என்று
கர்வப்பட எத்தனிக்கையில்
சில்லரையாக வந்து சேர்ந்தது
அதைவிடக் கிழிசலான
ஐந்து ரூபாய் நோட்டு...............
எல்லா இடத்திலும் ஒரு கவிதை
கொய்யாக்காய் விற்பவளின் கூச்சல்
பாட்டுப்பாடி பிழைப்பவர்கள்
இரயில் பெட்டிக்கே உரிய அருவருப்பு நிறம்
என் கழுத்தை இறுக்கும் டை
அலுவலக நேர நெரிசல்
புதிய தமிழ் பாடல்களை சிணுங்கும் செல்போன்கள்
பக்கத்தில் நிற்பவனின் இரண்டு நாள் வியர்வைச் சட்டை
இத்தனை நெரிசலிலும் ஆசுவசப்படத்துகிறது
அம்மாவின் முடியை இழுத்து
அழகாய்ச் சிரிக்கும் ஆறுமாதக் குழந்தை.........
- முத்தாசென் கண்ணா (mailto:[email protected])
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications