மறந்து பழக வாய்ப்பில்லை
Subscribe to Oneindia Tamil
விழிகளுக்கப்பால் எதையோ உருட்டி
அப்பா என்னை மிரட்ட
நான் படித்த குறள் மறக்கவில்லை
அடிபிறழ்ந்து நானெழுத பள்ளியில்
விழுந்த அடியும்...
சூட்டோடு சூடாய் வீட்டில்
காய்சியிழுத்த கம்பிச்சூடும்..
ஆச்சியின் வெத்தலை உரலை திருடிவிற்று
நான் குடித்த முதல் சிகரெட்டும்
இப்படியெதையும் மறக்கவில்லை...
இங்கே தேடிச்சோறு நிதம்தின்று
இன்னபிறவும் கிடைத்ததிருப்தியில்
காதலிக்கப்போய் அதுவும் கிடைக்க
இப்போ "மறந்துவிடு" என்கிறாள்
மறந்து பழக வாய்ப்பில்லை
அப்பாவின் மிரட்டும் விழியும்
கம்பிச்சூடும்
சிகரெட்டும்-இப்படி
மறப்பதற்கென எவ்வளவோ மறக்காமலிருக்கையில்
அவளை மறப்பதெப்படி....
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications