நித்திரையுலகம்-ரிஷி சேது
நித்திரையுலகம் -1
இங்கு வந்த பின்
பெயர்கள்
எண்களாகின்றன ..
நித்திரையுலகம் - 2
யாரும் ஏற்காதவர்களின்
உடல்கள் பெரும்பாலும்
நிறையப் பிள்ளைகள் பெற்றவர்களுடையதாயிருக்கிறது ...
நித்திரையுலகம் -3
முகங்களில் கவலை
தோன்றிய உடல்கள்
இறுதி நேரத்தில்
உணர்ந்திருக்கலாம்
வாழ்வதின் ரகசியங்களை ...
நித்திரையுலகம் -4
விபத்தில் சிக்கியவர்களின்
உடல்கள் புண்ணியம் செய்யப்பட்டவை
உடனே பெற்றுக் கொள்ளப்படுகின்றன ...
நித்திரையுலகம் -5
இந்தப் பிணவறையின்
காவலாளி சிறந்த ஞானியாகிறார்
வாழ்வியல் போட்டியில்,
வாழ்வதன் சூத்திரம் நான்
அழிப்பதென்கிறார் ...
நித்திரையுலகம் -6
ஆறாமெண்ணில்
வைக்கப்பட்டிருக்கும் உடலை
தினமும் ஒரு பெண் பார்த்துப் போகிறார்
அக்கிழவரின் முன் நாள் காதலியாயிருக்கலாம் ...
நித்திரையுலகம் -7
இத்தனையுடல்களை
பார்த்த பின்னும்
அதிர்ச்சியாய்த்தானிருக்கிறது
ஒவ்வொரு புதிய உடல் வரும்போதும்
வாழ்வு ஒளித்து வைக்கும்
மரணமெனும் அதிர்ச்சி ...
நித்திரையுலகம் -8
தற்கொலை செய்து கொண்டவர்களின்
உடல்கள் பெரும்பாலும்
நண்பர்களால் பெற்றுக் கொள்ளப்பட்டு
எந்த மதச் சங்கடங்களுமில்லாமல்
எரிக்கவோ, புதைக்கவோ
செய்யப்படுகின்றன ...
நித்திரையுலகம் -9
சாதிக் கலவரங்களில்
இறந்தவர்களின் உடல்கள்
கலவரங்களடங்கிய பின்
சாதிக்கொடி போர்த்தப்பட்டு
பின் அடக்கம் செய்யப்படும்
அதன் பின்னும் வரப் போகும்
பிணங்கள் பெரும்பாலும்
அந்த அடக்க நிகழ்ச்சியில்
கலந்து கொண்டவர்களுடையதாயிருக்கும் ...
நித்திரையுலகம் -10
எய்ட்ஸாலிறப்பவர்களின்
பிணங்கள் பெரும்பாலும்
ஏதேனுமொரு சமூக அமைப்பால்
பெற்றுக் கொள்ளப்படுகின்றன ...
நித்திரையுலகம் 11
கேஸ் வெடித்து
இறந்தவர்களின் உடல்கள்
பெரும்பாலும் புதிதாய்
திருமணமான
பெண்களுடையதாயிருக்கிறது ...
நித்திரையுலகம் 12
சிரித்த முகமாகவே
இருக்கிறது
குழந்தைகளின் உடல்கள்..
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications