வெட்டவெளி-ரிஷி சேது
Subscribe to Oneindia Tamil
எனக்கு அடர்ந்த
காடுகளை விட
வெட்டவெளியே பிரியம்
அங்கே நான் தொலைந்துபோகவும்
என்னை புள்ளியாய்
மாற்றிக்கொள்ளவும்
சத்தமிட்டு கத்தவும்
சாத்தியப்படா இன்னும்
எதுவெல்லாமோ செய்யவும் முடியும்
பூமிப் பந்தை
வானவில்லின் நுனியில்
கட்டி தூக்கிடவும்
கடலின் நீள் பேரலைகளில்
நட்சத்திரங்களையும்
நிலவையும்
கொட்டி ரசிக்கவும்
பார்வைகளின்
எல்லைகளில் நீளமும் அகலமுமாய்
தெரியும் பூமியை
புரட்டி பார்க்கவும்
வானம் தொடத்துடிக்கும்
மாமலைகளின்
தயிைல் செல்லமாய்
குட்டி உள் அழுத்தவும்
எலும்பை ஊடுறுவும்
காற்றை சற்று நேரம்
கைக்குள்
கட்டி வைக்கவும்
வானத்திலலையும்
மேகங்களின் பஞ்சுப்
பொதிக்குள்
போனகாலத்தின் பின்னாலும்
வருங்காலத்தின் முன்னாலும்
போய்த்திரும்பும்
மனதை கொஞ்சம்
ஈரமாய் ஒளித்து வைக்கவும்
இன்னும் என்னவெல்லாமோ
செய்யமுடியுமாதலால்
எனக்கு
அடர்ந்த காட்டை விட
வெட்டவெளியே பிரியம்..
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications