'புரட்சி'
-ஜாஃபர் சாதிக்
எங்கும் புரட்சி இன்று எதிலும் புரட்சி
எண்கள் கூடுவதே முன்னேற்றமாம்
இலக்கங்கள் கூடியது வழக்கமானது
கொழிக்கும் தொழில்களில் என்றல்ல
செழிக்கும் பொருளாதாரம் மட்டுமல்ல
பங்குச் சந்தையில் வறியவர்களின் கந்தையில்
ஆணவ அகந்தையில் உறவுகள் எறிந்த விந்தையில்
அழிவுச் சிந்தையில் நல்லொழுக்க நிந்தையில்
ஆயுதம் ஏந்தையில் ரத்தம் சிந்தையில்
எண்கள் கூடியது இவைகளில் மட்டுமா?
புத்தம்புது கட்டிடங்களில் முதியோர் மடங்களில்
விசித்திர நுகர்வுகளில் பசித்த வயிறுகளில்
நவீனபயிர்மாற்றத்தில் உடல் வேதிமாற்றத்தில்
துரித உணவுகளில் அதீத நோய்களில்
எண்களின் ஏற்றம் கண்ட அதிசய முன்னேற்றங்கள் இன்னும்
தொழிற்சாலையில், விபச்சார ஆலையில்
அதிநவீன கலைகளில் பண்பாட்டுக் கொலைகளில்
அழைப்பு மையங்களில் கலாச்சாரத் தாக்கங்களில்
விடுதிஆட்டங்களில் பெண்வேட்டைகளில்
யானை வாயில் மீள முயலும்
கோழிக்குஞ்சுக்கு கிடைத்த பட்டமும் புரட்சியே!
என்ன புதுமை! என்ன புரட்சி!
அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறை – அது நியாயவாதம்
பலியாகும் வர்க்கத்தின் குமுறலோ தீவிரவாதம்
சட்டம் வளைத்து படுகொலை – அது அறநெறி
உயிர்காக்கும் போராட்டமோ இனவெறி
மனித மந்தைகளின் விநோத விந்தைககள் இதோ
தரணியின் தலைவிதி தீர்மானிக்கும் மன்றம்
இது பூம்பூம் மாடுகளின் சங்கம்
தலையாட்டும் பொம்மைகளின் சங்கமம்
இறையருள் வேண்டி
கோவில்களில் "ஓம்"
பள்ளிவாசல்களில் "ஆமீன்"
தேவாலயங்களில் "ஆமென்" - ஆனால்
தலையசைக்கும் தலைவர்களின் "ஆமாம்" முழக்கம்
உலக சமாதானத்தின் கலக்கம்
சத்தியம் உரைக்க முனைவோர் – இங்கே
இருக்கை இழப்பது நிச்சயம்
குரோத நரிகளின் சூழ்ச்சியில் – தரணியின்
விரோதியாவதும் சாத்தியம்
ஏடுகளின் சிந்தையோ வியாபாரச் சந்தை
அரசியல் குண்டர்களின் லாபகார உடந்தை
உயிர்பயத்திலும் செல்வமயத்திலும்
உண்மையை கத்தரிக்கும் பத்திரிக்கை தர்மம்
வயிறு பிழைக்க நேர்மையிழக்கும் கத்தரிக்காய் தர்மம்.
இவைகள்தான் இக்கால புரட்சிகள் - மொத்தத்தில்
நியாயத்தின் மனித நேயத்தின் வறட்சிகள்!
(ரியாத் இந்திய தூதரகத்தில், ரியாத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடந்த முப்பெரும் கலைவிழாவில் சங்கப் பொருளாளர் ஜாஃபர் சாதிக் வாசித்தளித்த கவிதை)
-ஜாஃபர் சாதிக் ([email protected])
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications